fbpx
  • Tiruppur District, Palladam, Tamilnadu
  • Tiruppur, TN

கண் திருஷ்டி

கல்லடிக்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது என்பார்கள்.

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு பல லட்சங்களை கோடிகளை முதலீடு செய்து தொழில் செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஏதாவது இடையூறுகள் வந்து நம்மை முன்னேற விடாமல் செய்து விடும்.

ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கும் என்பது போல நாம் முன்னேறும் போதெல்லாம் கண் திருஷ்டியினால் தொழில் பிரச்சினை, கடன் தொல்லை, சண்டை சச்சரவு இப்படி பல பல இடையூறுகள் வந்து நம்மை முன்னேறவே விட மாட்டார்கள்.

இன்னும் பலர் ஒரு ரூபாய் வரவு என்றால் 100 ரூபாய் செலவு என வீண் விரையங்கள் ஏற்பட்டு கடனுக்கு மேல் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இன்னும் சிலரோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல வந்த வாய்ப்புகள் எல்லாம் கை நழுவிப் போகும்போது செய்வதறியாது திகைக்கின்றனர்.கொடிய மிருகத்தின் பிடியில் (பார்வையில்) இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் கண் திருஷ்டிக் காரர்களின் கொடிய பார்வையில் இருந்து தப்பவே முடியாது.

"நம்மையும் நம் தொழில்களையும் பாதுகாப்பது எப்படி?"

"இந்த கொடிய கண் திருஷ்டியை வெல்வது எப்படி?"

போட்டி பொறாமை

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைக்கும் நம் விரோதிகள்

மத்தியில் நாம் வாழ்வது மிக மிக கடினமான விஷயம்.

தான் முன்னேறா விட்டாலும் பரவாயில்லை. அடுத்தவன் முன்னேறி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வாழ்க்கை என்பது வழுக்கு மரம் போல. நாம் கஷ்டப்பட்டு முன்னேறும் போதெல்லாம், நம் முன்னேற்றத்தை தடுப்பதற்காக, நம் தொழிலை கெடுப்பதற்காக, செய்வினை, சூனியம் போன்று ஏதாவதொரு இடையூறுகளை செய்து கொண்டே இருப்பார்கள்.

நன்றாக நடக்கும் தொழிலை நசித்து விடுவார்கள். நன்றாக வாழும் குடும்பத்தை அழித்து விடுவார்கள். ஆரோக்கியமானவர்களை நோயாளியாக ஆக்கிவிடுவார்கள். நமக்கு நெருக்கமானவர்களை எல்லாம் விரோதிகளாக மாற்றி விடுவார்கள்.

நம் வாடிக்கையாளர்கலெல்லாம் கை மாறி விடுவார்கள். கஷ்டம், நஷ்டம், கடன் தொல்லை, அப்பப்பா பொழுது விடிந்தால் இன்று என்ன பிரச்சினை வருமோ என்று ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும். தொழிலையே விட்டு விடலாமா அல்லது விற்று விடலாமா எல்லாவற்றையும் விற்றாலும், கடனை அடைக்க முடியாது. அதனால் உயிரையே விட்டு விடலாமா?

"இந்த விரோதிகளின் சூழ்ச்சிகளை வெல்வது எப்படி?"

"நம் போட்டியாளர்களின் முன் நாம் முன்னேறுவது எப்படி?"

"நாம் தொழிலில் வெற்றி பெறுவது எப்படி? இதற்கு என்ன வழி?"

கிரக நிலை மாற்றங்கள்

கிரக நிலை மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் இது இறைவனின் நாட்டங்கள்

நம் தொழில் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதில் காலநிலை மாற்றங்கள் முக்கிய காரணமாகும். ஏனென்றால், காலநிலை மாற்றம், நம் உடலிலும், உள்ளத்திலும், நம் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக சீசனல் டிசிஸ். ஒவ்வொரு காலநிலை மாறும் போது, ஒவ்வொரு விதமான வியாதிகள் மனிதனை பாதிக்கின்றன

உதாரணமாக மழை காலத்தில் காய்ச்சல், பனி காலங்களில் சளி, வெய்யில் காலத்தில் வயிற்றுப்போக்கு, தோல் வியாதிகள். இப்படி காலநிலை மாற்றம், நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோல, காலநிலை மாற்றம், நம் உள்ளத்திலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு காலம் நிலை, நம் மனதுக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும்

ஒரு கால நிலை, நமக்கு கவலையையும் விரக்தியையும் ஏற்படுத்தும். இன்னொரு காலநிலை நமக்கு கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனால் தான் சண்டை சச்சரவு, வழக்கு, வாக்குவாதங்கள், மன உளைச்சல் ஏற்படுகின்றன. இதைப் போலத்தான் கால நிலை மாற்றங்கள் நம்முடைய தொழிலிலும், வாழ்க்கையிலும், பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றன. உதாரணமாக, உப்பு விற்க போனால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

மாவு விற்க போனால், சூறை காற்று சுழன்று அடிக்கும். இப்படி, நாம் ஒரு தொழில் செய்யும் போது, அந்த கால நிலை முற்றிலும் நமக்கு மாற்றமாக செயல்பட்டு நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து நம்மையும், நம் தொழிலையும், நம் முன்னேற்றத்தையும், தடை செய்து விடும். இதனால், தொழிலில் பாதிப்புகள் ஏற்பட்டு, கடன் தொல்லைகள், அதிகமாகி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், தொழிலையே விட்டு விடலாமா? அல்லது விற்று விடலாமா? எல்லாவற்றையும் விற்றாலும் கடனை அடைக்க முடியாது. அதனால் உயிரையே விட்டு விடலாமா? என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு காலநிலை நம்மை மாற்றி விடும்.

உங்கள் கஷ்டங்களை தீர்க்கும் J.M அச்சரம்

எனவே நம் வாழ்க்கை, நம் தொழில் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது கண் திருஷ்டி, போட்டி பொறாமை, கிரக நிலை மாற்றங்கள என்பது தெளிவாகிறது. சரி இந்த மூன்று வினைகளிலிருந்தும்

நாம் தப்பிக்க என்ன வழி?
இந்த மூன்று விஷயங்களையும் வெள்வது எப்படி?
நம் வாழ்க்கையில், நம் தொழிலில் வெற்றி பெறுவது எப்படி?
இதற்கு வழி இருக்கிறதா?

ஆம் வழி இருக்கிறது என்கிறார்கள் மஹான்கள்.
அதுதான் இஸ்முல்லா என்ற J.M அச்சரம்
விதி சதி செய்தாலும் இறைவன் கைவிடமாட்டான்.

எல்லாம் வல்ல இறைவனின் திருநாமங்களை வைத்து எழுதக்கூடிய இஸ்முல்லா என்ற J.M அச்சரம் இருக்கும் இடத்தில் இருளும் இருக்காது. எதிரிகளின் இடையூறுகளும் இருக்காது. காரிருளில் சிக்கி தவிப்பவர்களுக்கு ஒரு கை விளக்கு கிடைத்தால் கூட போதும், அந்த வெளிச்சத்தில் சரியான பாதையில் முன்னேறி விடுவார்கள்.

J.M அச்சரம், இருண்டு போன, நம் வாழ்க்கையில், கலங்கரை விளக்காய் ஒளியூட்டி, வாழ வழிகாட்டி, நம் தொழில் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

J.M அச்சரம் நம்மிடத்தில் இருக்கும்போது கண் திருஷ்டி, போட்டி, பொறாமை, செய்வினை, தொழில் பிரச்சனை, கஷ்ட நஷ்டம், கடன் தொல்லைகிரக நிலை பாதிப்புகள் போன்ற, எல்லா வினைகளும் நீங்கி நம் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை இறைவன் நமக்கு அருளுவான்

"தொழிலில் நஷ்டமா வாழ்க்கையில் கஷ்டமா?"

"நம்முடைய தொழில் நஷ்டத்திற்கு விரோதிகள் கூட காரணமாக இருக்கலாம்"

"தடைகளை தாண்டி தொழிலில் வெற்றி பெற"