fbpx

எங்களை பற்றி

J.M. மருத்துவமனையின் மருத்துவமும் மகத்துவமும்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில், 1927ஆம் ஆண்டு J.M. மருத்துவமனை நிறுவப்பட்டது. மருத்துவர் M.நூர்முகமது சாஹிப் அவர்களால் 1927ம் ஆண்டு துவங்கப்பட்ட J.M. மருத்துவமனை, Dr.M.N.முகமது யூசுப், Dr.M. ஹாஜிப்பா என்ற 3 தலைமுறைகளாக 90 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

J.M. மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோ ஆங்கில மருத்துவம் மற்றும் தெய்வீக மருத்துவம் போன்ற அனைத்து முறை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அனைத்து முறை மருத்துவ நிபுணர்களும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால் என்னென்ன நோய்களுக்கு என்னென்ன முறை சிகிச்சைகள் முழு நிவாரணம் அளிக்கும் என்று கலந்து ஆலோசித்து நோய்களின் தன்மைக்கேற்ப அந்தந்த முறையில், முறையான சிகிச்சை அளிப்பதால் கடுமையான நோய்களும் முழுமையாக குணமடைகின்றன.

J.M. மருத்துவமனையில் அல்சர், ஆஸ்துமா, கேன்சர், சைனஸ் நாள்பட்ட சளி, தும்மல், தீராத தலைவலி, முழங்கால், மூட்டு வலி, மூட்டு தேய்மானம், சரவாங்கி, பக்கவாதம், சோரியாசிஸ், நாள்பட்ட தோல் வியாதிகள். மூல வியாதிகள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கர்ப்பப்பை கோளாறுகள், குடல் புண் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வீக மருத்துவம்

J.M. மருத்துவமனையின் இன்னொரு சிறப்பம்சம், தெய்வீக மருத்துவம். மருந்தளிப்பது மருத்துவர் என்றாலும் குணமளிப்பது இறைவனல்லவா, எனவே “இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” என்ற மகான்களின் அருள் வாக்குபடி, தீராத நோய்களும் தீர, எல்லாம் வல்ல இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்து, அட்சரம், எந்திரம் கொடுத்து தெய்வீக மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கிறோம்.

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் அவை, உடல் சார்ந்த நோயானாலும் உள்ளம் சார்ந்த நோயானாலும், கண்திருஷ்டி, செய்வினை, சூனியம், ஜின் சைத்தான், பேய், பிசாசு, போன்ற தீய சக்திகளால் ஏற்பட்ட நோய்களானாலும், இறைவனிடம் பிரார்த்தனை செய்து, எந்திரம் கட்டினால், சூரியனை கண்ட பனி போல் தீராத நோய்களும் தீர்ந்து விடும். மனிதனின் உடலில் மூன்றாயிரம் வியாதிகள் ஏற்படுகின்றன. அதில் ஆயிரம் வியாதிகளுக்கு மட்டும் தான் மருந்தால் குணமாக்க முடியும். மீதம் இரண்டாயிரம் வியாதிகளுக்கு தெய்வீக மருத்துவ முறையில், பிரார்த்தனையின் மூலம் தான் தீர்வு காண முடியும். ஏனென்றால் ஒரு மனிதனின் (விதியை) தலை எழுத்தையே மாற்றக் கூடிய சக்தி இந்த பிரார்த்தனைக்குத்தான் உள்ளது. மரணத்தின் பிடியில் சிக்கிய மனிதனுக்கு மறு வாழ்வு அளிக்கக் கூடிய அற்புத சக்தி தெய்வீக மருத்துவத்தில் தான் உள்ளது. அதனால் தான் J.M. மருத்துவமனையில் மருத்துவ முறையுடன் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வீக மருத்துவமும் இணைந்து அளிக்கிறோம். மருந்தளிப்பது மருந்துவர் என்றாலும், குணமளிப்பது இறைவன் அல்லவா!

“இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!”

J.M. மருத்துவமனை வாருங்கள், ஜெயம் நிச்சயம் காணுங்கள்

எங்களை தொடர்பு கொள்ள
J.M Hospital Palladam