fbpx

அலர்ஜி, ஆஸ்துமா சைனஸ் தலைவலி

Causes for Sinus

எண் ஜாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பர், எட்டு ஜாண் உயரம் உள்ள இந்த உடலுக்கு தலையே பிரதானமாகும். தலையில் ஏற்படக்கூடிய எல்லா வியாதிகளுக்கும் சிலேத்ம நீர் தான் முக்கிய காரணமாகும். அலர்ஜி, அடுக்குத் தும்மல், ஆஸ்துமா, சைனஸ், தலைவலி போன்ற வியாதிகள் எல்லாம் தனித்தனி வியாதிகளாக தோன்றினாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையுது. தலை, கண், காது, மூக்கு தொண்டை சுவாசப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் சிலேத்மம் என்ற குளிர்ச்சி மிகுதியால் ஏற்படுகின்றன.

மனிதனின் உடலில் சிலேத்மம் அதிகரித்து, கபால நீரானது தலையில் சேரும் போது தலைவலி, ஒரு பக்க தலைவலி, சளி, தும்மல், மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி (பீனிசம்) என்ற சைனஸ், தொண்டை கோளாறுகள், சளி, இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. வாத, பித்த சிலேத்மம் என்ற முத்தோஷ்ங்களின் வேறுபாடுகளினாலும், சிலேத்ம மிகுதியாலும் கபால நீராலும், கண், காது, மூக்கு, தலை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுகின்றன். இதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தலைவலி

குளிர்ந்த நீரில் குளிப்பதாலும், குளிர் காற்றில் பனிக்காற்றில் வெளியே செல்வதாலும், குளிச்சியான உணவுகளை அதிகம் புசிப்பதாலும் கபால நீரானது தலையில் தங்கி தலை வலி ஒரு பக்க தலைவலி, பிடரி வலு, தலை பாரம், மண்டை இடி, சூரிய இடி, சூரியாவர்த்தம், சந்திராவர்த்தம் போன்ற பல விதமான தலை வலிகள் ஏற்படுகின்றன. இத்தகைய தலை வலிகளுக்கு ஊசி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டால் அப்போதைக்கு சற்று வலி குறையலாம்.

பிறகு மீண்டும் மீண்டும் தலை வலி வந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் தலையில் தங்கியுள்ள கபால நீரை நீக்காமல் எவ்வளவு மருந்துகள் உட்கொண்டாலும் தலை வலி குணமாகாது. தலை வலிக்கான காரணங்களை ஆராயாமல் அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் குடல் புண், வாய் புண் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமே தவிர தலை வலி குணமாகாது. எனவே தான் J.M. மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் தலையில் தங்கியுள்ள கபால நீரை நீக்குவதற்கான சீரோ வஸ்த்தி, தாரா சிகிச்சை, எண்ணெய் குளியல், நீராவிக் குளியல் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். எவ்வளவு நாள்பட்ட தலைவலிகளானாலும், ஏழு நாள் சிகிச்சையில் பூரணமாக குணமாகும்.

சைனஸ் என்ற பீனிச நோய்

இப்போழுது எங்கு பார்த்தாலும் சளி, தும்மல், மூக்கடைப்பு, சுவாச கோளாறுகள் போன்ற நோய்களால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை அலர்ஜி, டஸ்ட் அலர்ஜி, என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுகின்றனர். நாள் பட்ட சளி, சுவாசக் கோளாறுகளை அலர்ஜி என்ற ஒரு சொல்லில் அடக்கி ஆயுள் முழுவதும் அலர்ஜிக்கான மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர் சதா இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் என அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்நோய்கு நிரந்தர தீர்வு இல்லையா? இருக்கிறது என்கிறார் டாக்டர் ஹாஜிப்பா.

நவீன காலத்தில் அலர்ஜி “சைனஸ்’ என்று சொல்லக்கூடிய இந்த நோயை பீனிசம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். சைனஸ் என்ற ஒரு வார்த்தையில் சொல்லக்கூடிய பீனிச நோயை 21 வகையாக சித்தர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவை வாத பீனிசம், பித்த பீனிசம், சிலேத்ம பீனிசம், நீர்பீனிசம், சீழ் பீனிசம், ரத்தபீனிசம், என் 21 வகையான பீனிச நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. ஒவ்வொரு வகையான பீனிச நோக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. நமது நாட்டில் நீர் பீனிசம் என்ற நோய் தான் அதிகமாக ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள், அதிகமான சளி, அடுக்குத் தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல், இன்னும் சிலருக்கு அதிகமான தும்மல் தொடந்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் போய்விடும். அந்த அளவுக்கு மிகக் கடுமையான தும்மல் ஏற்படும். எப்பொழுதும் சளி, இருமல், தும்மல் ஏற்பட்டு நாளடைவில் ஆஸ்துமா என்னும் நோய் ஏற்படும் அலர்ஜி என்னும் பீனிச நோயை முழுமையாக குணப்படுத்த, J.M.மருத்துவமனையில் ராஜ மூலிகைகளைக் கொண்டு, நசியம், தாரா, சிரோவஸ்த்தி சிகிச்சை முறையில் நிரந்தர நிவாரணம் அளிக்கிறோம்.

ஆபேரஷன் இல்லாமல் பக்க விளைவுகள் இல்லாமல் மூலிகை மருந்துகளால் முழு குணம் காண வாருங்கள்.